சுந்தரராஜ பெருமாள் கோயிலில் அக்காரவடிசில் ஜன., 12 அன்று கூடாரவல்லி வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2024 09:01
பரமக்குடி; பரமக்குடி பெருமாள் கோயிலில் மார்கழி 27 ம் நாளில் கூடாரவல்லி விழா நடக்கிறது. அப்போது 216 வட்டிலில் அக்காரவடிசில் மற்றும் வெண்ணைய் பூஜை செய்யப்படும்.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் வடக்கு நோக்கி நித்ய பரமபதநாதனாக அருள் பாலிக்கிறார். இங்கு திருமாலிருஞ்சோலை அழகர் கோவில், கள்ளழகர் கோயில் விழாவை போன்று அனைத்து வைபவங்களும் ஆண்டு முழுவதும் நடக்கிறது. இதன்படி மார்கழி மாதம் ஆண்டாள் பாவை நோன்பு இருந்து, 27 வது நாளில் பெருமாளுடன் ஐக்கியமானதாக கூறப்படுகிறது. இதன் பொருட்டு ஆண்டாள், சுந்தரராஜ பெருமாளிடம் 108 அண்டாவில் சர்க்கரை பொங்கல் (அக்காரவடிசில்), 108 அண்டாவில் வெண்ணைய் படைப்பதாக வேண்டி இருந்தார். இதனை பின்நாளில் வந்த ராமானுஜர் யோசனையின்படி, ஆண்டாள் நிறைவேற்றினாரோ, இல்லையோ என்றபடியாக, ராமானுஜரே இந்த வைபவத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஜன., 12 காலை 5:00 மணிக்கு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பாவை கோஷ்டியினர் மற்றும் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.