பதிவு செய்த நாள்
10
ஜன
2024
05:01
சூலூர்; பெரிய குயிலி ஸ்ரீ கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை ஹனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
சூலூர் அடுத்த பெரிய குயிலியில் ஸ்ரீ கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி ஐந்து நாட்கள் சிறப்பு பூஜைகள், பஜனை மற்றும் வள்ளி கும்மி ஆட்டம் நடக்க உள்ளது. இன்று காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் ஹனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, பல்வேறு திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோகுல கிருஷ்ணலீலா பிருந்தாவன் குழுவினரின் பஜனை நடந்தது. மாலை வைரவேல் வள்ளி கும்மியாட்ட குழுவின் வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. நாளை காலை ,ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி, 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது. 9:30 மணிக்கு கோவை தண்டபாணி குழுவினரின் ஸ்ரீ ராம கான சபாவின் நாம சங்கீர்த்தனமும், மதியம், கீதா பஜன் மண்டலியின் பஜனையும், மாலை, தாள சங்கமம் கிராமிய கலை குழுவினரின் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 14 ம்தேதி 8:00 மணிக்கு பொங்கல் விழாவும், கீதா பஜன் பிருந்தாவன் நாட்டியமும் நடக்கிறது.