அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி விழா; அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2024 11:01
உத்தமபாளையம்; அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் ஹனுமனை தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டத்தில் ஹனுமனுக்கான பிரத்யேக கோயில் அனுமந்தன்பட்டியில் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் மூலவர் சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இந்த கோயிலில் இன்று காலை ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. மார்கழி மாதம் அமாவாசை திதியில் மூல நட்சத்திரத்தில் ஹனுமன் அவதரித்தார். அந்த நாளை ஹனுமன் ஜெயந்தி என்று கொண்டாடுகின்றோம். இன்று அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து கால சாந்தி பூஜை, சகஸ்ரநாம பூஜை, புஸ்பாஞ்சலி நடைபெற்றது. முன்னதாக நேற்று பால்குட ஊர்வலம், ஹோமம் போன்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று காலை ஹனுமன் ஸ்வர்ண அலங்காரத்தில் எழுந்தருளினார். அதிகாலை முதல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசனம் செய்த பக்தர்களுக்கு துளசி மாலை, வாழைப்பழம், வடை, கேசரி, சர்க்கரை பொங்கல், குங்குமம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மூலவர் சன்னதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.