அயோத்தியில் தமிழ்; குவியும் பக்தர்கள்.. அன்னதானமாக 56 வகை உணவுகள் தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2024 08:01
அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பகலிரவு பாராமல் நடக்கின்றன. கும்பாபிஷேகத்துக்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், அயோத்தியில் ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் அயோத்தியில் குவியத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்காக பல்வேறு வகை பிரசாதமும் அன்னதானமும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக அயோத்தி தாம் சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் உட்பட 11 மொழிகள் இடம்பெற்றுள்ளன.
அயோத்தி வந்து குவியும் பக்தர்களுக்கு ஜனவரி 15 முதல் மார்ச் வரை ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதில் 56 வகை உணவுகள் பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் தொண்டு செய்வதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து விஎச்பி தொண்டர்களும் நிர்வாகிகளும் அயோத்திக்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்த அன்னதானம் ராமர் கோயில் அறக்கட்டளை அலுவலகம் அமைந்த ராம்கோட் பகுதியில் நடைபெற உள்ளது.