அயோத்தியில் அனைத்தும் சாஸ்த்திரப்படியே நடக்கிறது; தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2024 03:01
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் அனைத்தும் சாஸ்த்திரப்படியே நடத்தப்படுவதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பகலிரவு பாராமல் நடக்கின்றன. இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையில், கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக சிலர் விமர்சித்துள்ளது குறித்து அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸிடம் கேட்ட போது; அயோத்தியில் அனைத்தும் சாஸ்த்திரப் படியே நடக்கின்றன. விழாவில் பங்கேற்காததற்காக சிலர் ஏதேதோ சொல்கிறார்கள். குழந்தை ராமர் சிலையை அவர் பிறந்த இடத்தில் நிறுவுவதற்கு இதற்கு முன் வேறு யாரும் முயற்சிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. என கூறினார்.