அயோத்தி ராமர் கோயிலில் 108 அடி உயரம், 3,610 கிலோ எடை கொண்ட ஊதுபத்தி ஏற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2024 01:01
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 22ம் தேதி, ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. பிரமாண்ட விழாவிற்கு நாடே தயாராகி வருகிறது. கும்பாபிஷேக விழா இன்று முதல் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக, கோயிலில் 108 அடி உயர ஊதுபத்தி ஏற்றப்பட்டது. இந்த 108 அடி நீள ஊதுபத்தி குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த விஹா பர்வத் என்ற பக்தர்கள் காணிக்கையாக வழங்கியதாகும். 108 அடி நீளமும், 3.5 அடி அகலமும் கொண்ட இந்த ஊதுபத்தி 3,610 கிலோ எடை கொண்டதாகும். முற்றிலும் இயற்கையான முறையில் இந்த ஊதுபத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.