வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான சிறப்பு பூஜைகள் இன்று துவங்கியதையடுத்து பழைய கோயில் உள்ள குழந்தை ராமரை இன்று (ஜன. 16) மட்டும் சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். அவர்கள் காலணி அணிந்திருந்தனர். எனினும் அதை கழற்ற வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தி சீல் வைக்கப்படும். உரிய அங்கீகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை காண ஜன. 21 மற்றும் 22ம் தேதியே பக்தர்கள் கூட்டம் எவ்வளவு இருக்கும் என கற்பனை செய்ய முடியும். அயோத்தியில் தசரத் மஹால், சராயுநதி ஹனுமன் கர்கி உள்ளிட்டவை பார்க்க வேண்டிய இடங்களாகும். நகரில் உள்ள அனைத்து கடைகள், பழைய கட்டிட சுவர்களில் பெயிண்ட் அடித்து புதுப்பித்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன் சேறும் சகதியுமாக சாலைகள் இருந்தது. இப்போது நம்பமுடியாத அளவிற்கு தூய்மைப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளன.சாலையில் கால்நடைகள் தொந்தரவு, கழிவுகள் போன்றவை இல்லாமல் பயணிக்கலாம். இங்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஆட்டோவில் செல்ல ரூ. 10/- மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது அயோத்தி நகரம் புது வண்ணங்களாலும், புது எண்ணங்களாலும் ஜொலிப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.