ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் முழங்க கருவறைக்குள் கொண்டு செல்லப்படுகிறது பால ராமர் சிலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2024 08:01
அயோத்தி: அயோத்தி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலை பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷம் முழங்க கோவில் வளாகத்திற்குள் இன்று (17 ம் தேதி) கொண்டு வரப்பட்டது. 34 சிறப்பு ரயில்கள்: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோர்ட்டுகளுக்கு விடுமுறை அளிக்க கோரி கடிதம்: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் ஜன,.22ம் தேதி அன்று நாடு முழுவதும் கோர்ட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய பார் கவுன்சில் தலைவர் எம்.கே. மிஷ்ரா, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.