அயோத்தி ராமர் கோவில் கருவறையில் குழந்தை ராமர்; விண்ணை பிளந்த ஜெய்ஸ்ரீராம் கோஷம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2024 10:01
அயோத்தி ராமர் கோவிலில் ஜனவரி 22ல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலை, கருவறையில் கொண்டு சென்று வைக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்துக்கான சடங்குகள் துவங்கி ஜன.21 வரை நடக்கின்றன. உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் ஆவலுடன் எதி்ர்பார்த்துக் கொண்டு இருக்கும் அயோத்தி ராமர் ஜென்பூமியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேகத்துடன் வரும் 22ல் திறக்கப்பட உள்ளது. விழாவில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலை, கருவறையில் கொண்டு சென்று வைக்கப்பட்டது. முன்னதாக வேத விற்பன்னர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். 150 முதல் 200 கிலோ வரையிலான இந்த சிலை கிரேன் மூலம் எடுத்து கோயில் கருவறையில் வைக்கப்பட்டது. இந்த சிலை மைசூரை சேர்ந்த அருண்யோகி ராஜ் இந்த சிலையை வடிவமைத்திருந்தார். இன்று 18ம் தேதி ஜல யாத்திரை, தீர்த்த பூஜை, கந்தாதிவாஸ் சடங்குகள் நடக்கிறது.