அயோத்தி பிரான் பிரதிஷ்டையின் 4ம் நாள் சடங்குகள் துவக்கம்; முழு வீச்சில் தயாரானது ராமபூமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2024 11:01
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இன்று பிரான் பிரதிஷ்டையின் நான்காம் நாள் சடங்குகள் ஆரம்பமானது. இன்று 19ம் தேதி கேசராதிவாஸ், கிருதாதிவாஸ், ஔஷததிவாஸ், குந்த்பூஜன் மற்றும் பஞ்சபூ சன்ஸ்காரம் ஆகியவை நடைபெறும். அன்று மாலை, தான்யாதிவாஸ் சடங்கு மற்றும் ஆரத்தி வழிபாடு நடைபெறுகிறது. உலகமே எதிர்பார்க்கும் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடக்கிறது. ஜனவரி 22ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.