அயோத்தி; அயோத்தி கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள பால ராமர் சிலையின் படம் வெளியாகியுள்ளது. பிரதிஷ்டை விழா, ஜன.,22 அன்று கோலாகலமாக நடக்கிறது.
அயோத்தி, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, முக்கிய சடங்குகளின் ஒரு பகுதியாக கருவறைக்குள் பால ராமர் (ராம் லல்லா) சிலை நிறுவப்பட்டுள்ளது. முன்னதாக, வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்த ராம் லல்லா சிலையின் படங்கள் வெளியிடப்பட்டனர். இன்று வெளியான படத்தில் சிலை வடிவமைப்பில் உள்ள ஒவ்வொறு நுணுக்கங்கமும் பிரமிக்க வைக்கிறது. மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் செதுக்கப்பட்ட 51 அங்குல சிலை நேற்று (18 ம்தேதி)அதிகாலை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று பிற்பகல், ராம் லல்லா சிலை கருவறையில் வைக்கப்பட்டது என்று அருண் தீட்சித் தெரிவித்தார். ஜனவரி 22ம் தேதி ராமர் கோயிலில் பிரான் பிரதிஷ்டா விழாவிற்குப் பிறகு, மறுநாள் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.