அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜன.,22ல் நடப்பதை முன்னிட்டு கடைசி கட்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கிறது. நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகைக்காக அயோத்தி தயாராகி வருகிறது. நகரம் முழுவதும் துாய்மை செய்வது, வர்ணம் அடித்து பொலிவுபடுத்தும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் அனைத்தும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை உ.பி., மாநில அரசும், ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று செய்து வருகின்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.