காணும் இடமெங்கும் காவிக்கொடி.. ராமகோஷம்; அயோத்தியில் சில மணிநேரத்தில் துவங்குகிறது கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 09:01
அகிலமே காத்திருந்த அயோத்தி ராமர் கும்பாபிஷேகம் இன்று மதியம் 12.05 மணிக்கு நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக சடங்குகள் இன்னும் சில மணிநேரத்தில் துவங்க உள்ளது. கோயிலில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. பிரமாண்டமாக எழுந்துள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 11 நாட்களாக கடுமையான விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி, பிராண பிரதிஷ்டைக்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். விழாவில் ஹிந்து மத தலைவர்கள், ஜீயர்கள், சன்னியாசிகள், பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மத வேறுபாடு பாராமல் அயோத்தியில் உள்ள அனைவரும் குதுாகலமாக வீடு, கடைகள் வீதிகளை அலங்கரித்து கொண்டாடி வருகின்றனர். நகர் எங்கும் காவிக்கொடி பறக்கிறது.