எங்கும் தெய்வீகம்.. திரேதா யுகத்தில் இருப்பது போல் உள்ளது; அயோத்தி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2024 10:01
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து அயோத்தி நகரமே பக்தர்கள் குழுக்களால் நிரம்பி வழிகிறது.
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தலைமை அர்ச்சகர், ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறுகையில், "பிராண பிரதிஷ்டை முடிந்ததும், அயோத்தி நகரம் தெய்வீகமாக காட்சியளிக்கிறது. இந்த நேரத்தில் திரேதா யுகத்தில் இருப்பது போல் உள்ளது. அயோத்தி பக்தர்கள் குழுக்களால் நிரம்பி வழிகிறது. முதல் நாளே தரிசனத்துக்கு இவ்வளவு பேர் வந்திருக்காங்க. 4000 மகான்கள் குழுவாக வந்திருக்காங்க... இன்னைக்கு அயோத்தி நகரம் தெய்வீகமாக காட்சியளிக்கிறது. என்று கூறினார்.