அயோத்தி ராமர் பிரதிஷ்டை; ஞானபுரீ கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2024 01:01
திருவாரூர்; நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலத்தில் ஸ்ரீ ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஞானபுரீ சித்ர கூட சேத்திரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி தேவஸ்தானத்தில் 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு லட்சுமி நரசிம்மர் மற்றும் சீதா, லட்சுமண, ஹனுமத் சமேத கோதண்டராமர் சுவாமி தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு ஸ்ரீ ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியார் ஸ்ரீ சேத்திர சகடபுர ஸ்ரீவித்யா பீடாதீஸ்வர ஸ்ரீ வித்யாபிரவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹா சுவாமிகளின் பரிபூரண ஆசீர்வாதங்களுடன் நேற்று காலை சீதா, லட்சுமண, ஹனுமத் சமேத ஸ்ரீ கோதண்ட ராம சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், தொடர்ந்து அகண்ட நாம பஜனை, கூட்டு வழிபாடு நடைபெற்றது. மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருவருளையும், குருவருளையும் பெற்றனர். பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமவுலீஸ்வரர் ஆகியோர் செய்துள்ளனர்.