ராமராஜ்யம் ஆரம்பம்; அலைமோதும் பக்தர்கள்.. எத்தனை நாள் ஆனாலும் தரிசிக்காமல் திரும்ப மாட்டோம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2024 03:01
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், குழந்தை ராமரின் சிலை நேற்று மதியம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவை, ஜாதி, மதம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து, மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். எத்தனை நாள் ஆனாலும் ராமரை தரிசிக்காமல் கிளம்ப மாட்டோம் என்று பக்தர்கள் அயோத்தியில் தங்கி உள்ளனர். பிராண பிரதிஷ்டா விழாவிற்குப் பிறகு, உ.பி.யின் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமிக்கு ஏராளமான ராம பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்ய வசதியாக போலீசார் மற்றும் நிர்வாகத்தினர் உஷார் நிலையில் உள்ளனர். ராமர் கோவில் கருவறையில் உள்துறை முதன்மை செயலாளர் சஞ்சய் பிரசாத் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜி பிரசாந்த் குமார் ஆகியோர் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். எங்கும் பக்தர்களின் ராமகோஷமும், காவி கொடியுமாக காட்சியளிக்கிறது அயோத்தி. கூட்டத்தை சமாளிக்க அதிக அளவில் பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர்.