ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ராமர் நடத்திய பூபதி திருநாள் விழா; தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2024 03:01
ஸ்ரீரங்கம்; ரங்கநாதருக்கு ராமர் கொண்டாடிய விழா தை மாதம் நடக்கிறது. இவ்விழா, பூமியை ஆண்ட ராமர் நடத்திய விழா என்பதால், பூபதி திருநாள் எனப்படுகிறது. இதை ராமரே நடத்துவதாக ஐதீகம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த பூபதி திருநாள் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தெற்கு உத்திர வீதியில் இருந்து உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஊர்வலம் மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, கிழக்கு உத்திர வீதி வழியாக சென்றது. தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் ரெங்கா .. ரெங்கா கோஷத்துடன் வழிபட்டனர்.