அவிநாசி; புதுப்பாளையம் ஊராட்சியில், வெங்கமேட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி சாமந்தங்கோட்டை அருகே உள்ள வெங்கமேடு இதில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக, 22ம் தேதி ஸ்ரீ கணபதி, ஸ்ரீ மகாலட்சுமி, கோ பூஜை, நவகிரக ஹோமங்கள் ஆகியவை தொடர்ந்து முதல் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து சாமந்தங்கோட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன் பின்னர், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகளில் அஷ்டபந்தனம், விநாயகர் பூஜை, கோபுர கலசம் வைத்தல் ஆகியவை நடைபெற்றது. இன்று அவிநாசி திருப்புக்கொளியூர் ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் முன்னிலையில், கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.