அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்; பிரமிக்க வைத்த லேசர் ஒளிக்காட்சி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2024 06:01
அயோத்தி; அயோத்தியில் ராமர் கோவிலில் லேசர் ஒளிக்காட்சி நடைபெற்றது. இந்த லேசர் ஒளிக்காட்சியை பார்த்த மக்கள் பிரமித்துப் போயினர்.
கோவிலின் முகப்பு பகுதியில் குழந்தை ராமர் மற்றும் பல கடவுள் படங்கள் லேசர் ஒளியில் தோன்றியதைக் கண்ட பக்தர்கள் பரவசப்பட்டனர். கோவிலைச் சுற்றிலும் மற்றும் சரயு நதிக்கரையிலும் பல ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு, அதன் தெய்வீக ஒளியும் எங்கும் காணமுடிந்தது. பொதுமக்கள் தரிசனத்திற்கு கோவில் திறக்கப்பட்டு ராமர் தரிசனம் பார்க்கலாம் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. மூன்று ஆண்டுகள் பல அடுக்கு பாதுகாப்பு காரணமாக என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்த இடத்தில், ஒரு சொர்கத்தையே சிருஷ்டித்துள்ளனர். எங்கும் எதிலும் காணப்படும் பிரம்மாண்டத்தைக் காண மக்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.