Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்பத்திருவிழா: இன்று மதுரை ... வடபழநியில் தைப்பூச விழா; காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்.. அதிகாலை முதல் முருகனுக்கு அபிஷேகம் வடபழநியில் தைப்பூச விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசம்; பழநிக்கு சாரை சாரையாக வந்த பக்தர்கள்.. வழிநெடுகிலும் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தைப்பூசம்; பழநிக்கு சாரை சாரையாக வந்த பக்தர்கள்.. வழிநெடுகிலும் பரவசம்

பதிவு செய்த நாள்

25 ஜன
2024
07:01

பழநி; பழநி தைப்பூச திருவிழா விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு முதல் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் காவடிகளுடன் கோயிலில் குவிந்தனர். காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பழநி, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், தைப்பூச திருவிழாவின் ஜன.19ல் கொடி ஏற்றப்பட்டு தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. புதுச்சேரி சப்பரம், ஆட்டுகிடா, வெள்ளி காமதேனு வாகனத்தில் தங்க குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு ரதவீதியில் நடைபெற்று வருகிறது. இன்று தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பழநிக்கு தைப்பூச பாதயாத்திரையாக வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் திரளாக வந்த வண்ணம் உள்ளனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சாலையின் இடது ஓரத்திலும் வரவேண்டும்.பழநி வரும் பக்தர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாதயாத்திரை பாதையில் நடந்து வர வேண்டும். பக்தர்கள் சிலர் சாலையின் பாதி வரை நடந்து வருகின்றனர். பழநி வரும் பாதையில் பயணிக்கும் பேருந்துகள், கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை போலீசார் மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர்.

சாரை சாரையாக வரும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் அன்னதானங்கள் பழங்கள் குளிர்பானங்கள் இளநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு உடல் கோளாறுகள் ஏற்படும் கால் வலி கை வலி வயிற்று வலி ஆகியவைகளுக்கு மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண ஆயின்மென்ட் வழங்கப்பட்டு வருகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல் அறைகள் மற்றும் பக்தர்கள் தங்க நிரந்தர மற்றும் தற்காலிக இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழநி இடும்பன் குளம், சண்முக நதி பகுதிகளின் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. சண்முக நதி அருகே கோவை சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழநியில் நேற்று காலை முதல் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி 2000க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar