தெப்பத்திருவிழா: இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடைஅடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2024 07:01
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா இன்று(ஜன.,25) நடப்பதை முன்னிட்டு அதிகாலை முதல் இரவு வரை நடைசாத்தப்படுகிறது. இக்கோயில் தெப்பத்திருவிழா ஜன.,14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதுரை சிந்தாமணியில் கதிரறுப்பு விழாவில் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் எழுந்தருளினர்.
இன்று மாரியம்மன் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட மிதவை தெப்பத்தில் காலை 10:40 மணி முதல் 11:04 மணிக்குள் எழுந்தருளுகின்றனர். காலையில் இரு சுற்றுகளும், இரவு 7:00 மணியளவில் ஒரு சுற்றும் தெப்பக்குளத்தைச் சுற்றி தெப்பம் வலம் வருகிறது. இதற்காக இன்று அதிகாலையிலேயே அம்மனும், சுவாமியும் கோயிலில் இருந்து புறப்பட்டு, இரவு திரும்புகின்றனர். அதுவரை நடைசாத்தப்பட்டிருக்கும். பக்தர்கள் வசதிக்காக ஆயிரங்கால் மண்டபம் மட்டும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மதியம் 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.