மீன் வளம் பெருக வேண்டி முருகனுக்கு கடலில் பாலபிஷேகம், படையலிட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2024 02:01
நாகை ; தைப்பூசத்தையொட்டி, முருகனுக்கு, தீச்சட்டி ஏந்தி வந்த நாகை மீனவர்கள், கடலில் பாலபிஷேகம், படையலிட்டு வழிபாடு. மீன் வளம் பெருக வேண்டி, பெண்கள் கன்னி ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
தைப்பூசத்தையொட்டி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில், மீனவர்களின் காவல் தெய்வமாக விளங்கும் முருகப்பெருமானுக்கு கிழக்கத்தியார் பூஜை நடைபெற்றது. திருவிழாவில் அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து தீச்சட்டி ஏந்தி வந்த மீனவர்கள், கடற்கரையில் அமைந்துள்ள கிழக்கத்தியார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். அப்போது சுவாமி வந்த பெண்கள் கன்னி ஆடினர். அதனைத் தொடர்ந்து இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை காக்க வேண்டியும்,, மீன் வளம் பெருக வேண்டியும், முருகனுக்கு வங்ககடலில் பாலபிஷேகம் செய்தும் படையலிட்டும் மீனவர்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் பூஜை செய்த பால், பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. தைப்பூச கிழக்கத்தியார் திருவிழாவையொட்டி அக்கரைப்பேட்டையில் வண்ணமயமான வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் இடைவிடாது வானில் வர்ணஜாலம் காட்டிய மத்தாப்பு வெடிகளை கண்டு மக்கள் ரசித்தனர்.