Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பள்ளிவாசல் திறப்பு விழா; மத ... மிகப்பெரிய ஹிந்து கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி: தொல்லியல் துறை அறிக்கையில் தகவல் மிகப்பெரிய ஹிந்து கோவில் இருந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் வழிபாடு; குதூகலத்துடன் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் வழிபாடு; குதூகலத்துடன் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

26 ஜன
2024
11:01

வேடசந்தூர்; வேடசந்தூர் கோட்டூரில் தைப்பூசத்தை முன்னிட்டு, சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வழிபாடு செய்யும் நிலா பெண்ணே நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. கிராம மக்கள் குதூகலத்துடன் பங்கேற்றனர்.

வேடசந்தூர் ஒன்றியம் குட்டம் ஊராட்சி கோட்டூரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நிலா பெண் வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இதற்காக தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி, 10 வயதிற்கு உட்பட்ட ஒரு சிறுமியை, நிலா பெண்ணாக தேர்வு செய்கின்றனர். அவருக்கு உள்ளூர் மக்கள் பால், பழம் உள்ளிட்ட சத்தான பொருட்களை கோவிலில் வைத்து கொடுக்கின்றனர். நிலா பெண் விழா நடைபெறும் அன்று, அந்த சிறுமியின் தாய் மாமன்கள், அந்த மாசடச்சியம்மன் கோவிலிலேயே ஒரு தென்னை மர மட்டையால் ஆன குடிசையை கட்டி, சிறுமியை உள்ளே அனுப்புகின்றனர். பிறகு, சுவாமி கும்பிட்டு விட்டு தப்பாட்டத்துடன் ஊர்வலமாக மலை பகுதியை நோக்கி நடந்து செல்கின்றனர்.

அங்கு, மலையடிவாரத்தில் உள்ள சரளைமேடு என்ற பகுதிக்குச் சென்று, அங்கு வெளிச்சம் பொருத்தப்பட்ட பகுதியில் பூ மாலை ஜோடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது, உடன் சென்ற பெண்கள் அனைவரும் ஆவாரம் பூக்களை மாலையாக கோர்த்து, அந்த சிறுமியின் தலை, கை, இடுப்பு, கால் பகுதிகளில் கொலுசு மற்றும் ஒட்டியாணம் போல் போல் மாட்டி விடுகின்றனர். அங்கிருந்து மீண்டும் தாரை தப்பட்டை முழங்க ஆடல் பாடலுடன், ஊருக்குள் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு வந்து சேர்கின்றனர். அங்கு, ஆவாரம் பூ கூடையுடன் நடந்து வந்த சிறுமியை உட்கார வைத்து, பெண்கள் சுற்றி வலம் வந்து கும்மியடித்து பாட்டு பாடி மகிழ்ந்தனர். பிறகு கொஞ்ச நேரம் கழித்து கையில் தீப விளக்குடன் சென்று ஊர் மந்தையில் உள்ள கிணற்றில் அதனை மிதக்க விட்டு ஆவாரம் பூக்களையும் தூவி வழிபட்டனர். அதன் பிறகு, அனைவரும் வீடு திரும்பினார். இந்த வழிபாடு, ஊர் மக்கள் நலமாகவும், வளமாகவும் வாழவும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதாக மக்கள் தெரிவித்தனர். இன்று நடைபெற்ற நிலா பெண்ணே விழாவில், அதே ஊரை சேர்ந்த ஜெயபிரகாஷ் - சுதா தம்பதியின் மகளான யாழினி 10, தேர்வு செய்யப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவர்கள் குடும்பத்துடன் சீர்காழியில் வசிக்கும் நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு திரும்பி நிகழ்ச்சியை பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar