பதிவு செய்த நாள்
25
அக்
2012
10:10
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோவில் தசராவையொட்டி, பல்வேறு வேடமணிந்த ஏராளமான பக்தர்கள், அங்கு குவிந்தனர். மைசூருக்கு அடுத்தபடியாக சிறப்பு வாய்ந்த, இக்கோவில் தசரா திருவிழா, அக்., 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான, மகிஷாசூர சம்ஹாரம், நேற்று நள்ளிரவு, கோவில் கடற்கரையில் நடந்தது. ஆணவம் கொண்டு போரிட்ட மகிஷாசூரனை, அம்மன், சம்ஹாரம் செய்த இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேடம் : திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, வேலை கிடைக்க, குடும்பக் கடன் பிரச்னை தீர, நோய் நீங்கி உடல் ஆரோக்கியத்துடன் வாழ என, பல வேண்டுதல்களுக்காக, ஏராளமான பக்தர்கள் சுவாமி, அம்மன், காளி, அரக்கன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்தனர். குழுக்களாக கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை பிரித்த இந்த பக்தர்கள், கோவிலைச் சேர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.