பதிவு செய்த நாள்
25
அக்
2012
10:10
புதுடில்லி: டில்லியில், தசரா பண்டிகையின் நிறைவு நாள் விழாவான ராம்லீலா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையின் நிறைவு நாளாக விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. அதாவது, இலங்கை போரில், கொடியவனான ராவணனை, ராமன் வீழ்த்தி, சீதையை, அயோத்திக்கு அழைத்து வந்ததன் வெற்றி நாளாக, ராம்லீலா கொண்டாடப்படுகிறது. டில்லி, சுபாஷ் மைதானத்தில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோர் பங்கேற்றனர். ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் ராகுல், சோனியா பங்கேற்றனர். இதையொட்டி, ராவணன் அவரது மகன் இந்திரஜித் மற்றும் சகோதரன் கும்பகர்ணன் ஆகியோரது உருவ பொம்மைகள் மீது, தீப்பிழப்புகளுடன் கூடிய வில் வீசப்பட்டு, எரிக்கப்பட்டன. வான வேடிக்கைகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான டில்லி வாசிகள் பங்கேற்று, ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். விழாவையொட்டி, டில்லியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.