அயோத்தி ராமர் கோயிலில் 10 நாள் மண்டல பூஜை; அலைமோதும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2024 04:02
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் மண்டல பூஜை, 10ம் நாளான இன்று (பிப்.,1) சிறப்பு சிறப்பு யாக வழிபாடு நடைபெற்றது. விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி, உடுப்பி பெஜாவர மாதா யாக பூஜை செய்தனர். இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமரை வழிபட்டனர். கோயிலில் தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. அனைத்து பகுதிகளில் இருந்தும் சமய வேறுபாடின்றி அனைவரும் வழிபட்டு வருவது குறிபிடத்தக்கது.
ஸ்பைஸ்ஜெட் விமான சேவை துவக்கம்; அயோத்தியில் உள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட்டின் முதல் பயணியிடம் போர்டிங் பாஸை அயோத்தி டிஎம் நிதிஷ் குமார் வழங்கினார். அயோத்தியில் இருந்து சென்னை, அகமதாபாத், ஜெய்ப்பூர், பாட்னா, தர்பங்கா, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கும் என ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.