அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்; 11 நாளில் 25 லட்சம் பேர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2024 10:02
அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது.
இதன்பின், விழா நிறைவடைந்த மறுநாள் முதல், தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கும்பாபிஷேகம் நிறைவடைந்து 11 நாட்கள் கடந்த நிலையில், 25 லட்சம் பக்தர்கள் வழிபட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் நேற்று தெரிவித்தனர். பக்தர்கள் தங்கள் காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்களாக 8 கோடி ரூபாய் செலுத்தி உள்ளனர். இது தவிர, கோவில் பெயரில் காசோலை மற்றும் ஆன்லைன் வாயிலாக 3.50 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக அளித்து உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.