அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2024 10:02
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு தரிசிக்க வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமானும், ரிஷப வாகனத்தில் சோமாஸ் கந்தரும், காமதேனு வாகனத்தில் கருணாம்பிகை அம்மனும்,மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய பெருமானும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் நான்கு ரத திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.