பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2024 01:02
மயிலாடுதுறை; திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளி மற்றும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே உள்ள திருமய்ஞானம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது மேலும் அப்பர் சம்பந்தர் சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும் இக்கோவிலில் தை வெள்ளி மற்றும் உலக நன்மை வேண்டி அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது பின்னர் ஆம்ல குஜநாயகி அம்மன் சன்னதியில் திருவிளக்கிற்கு பூஜைகள் செய்து சிறப்பு அர்ச்சனைகள் செய்து பெண்கள் வழிபாடு நடத்தினர் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர் பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது.