பதிவு செய்த நாள்
05
பிப்
2024
05:02
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில், 6ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழாவையொட்டி திருத்தேர் விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நாயக்கனூரில் லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் உள்ளது. இங்கு, 6ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி சேஷ வாகனம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை, கருட வாகனம், அனுமந்த வாகனம், யாளி வாகனம், சந்திர பிரபை வாகனங்களில் லட்சுமி நரசிங்க பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை திருமஞ்சனம், யானை வாகன புறப்பாடு, இரவு திருத்தேர் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று லட்சுமி நரசிங்க பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி தாயார்களுடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.