உளுந்தூர்பேட்டை சாரதா பள்ளியில் மாணவர் முன்னேற்றத்திற்கான வித்யார்த்தி சிறப்பு ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2024 05:02
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாணவர் முன்னேற்றத்திற்கான வித்யார்த்தி சிறப்பு ஹோமம் நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் விவேகானந்தா சேவா பிரதிஷ்டான் சார்பில் மாணவர் முன்னேற்றத்திற்கான வித்யார்த்தி சிறப்பு ஹோமம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விவேகானந்தா சேவா பிரதிஷ்டான் தொண்டு நிறுவன இயக்குநர் ஆத்ம விகாசப்ரியாஅம்பா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் அசோக்குமார் சோர்டியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகள் ஆசிரம சகோதரிகள், ஆசிரியர்கள், அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.