கள்ளிக்குடி வலஞ்சுழி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2024 05:02
கள்ளிக்குடி; கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் உள்ள ஸ்ரீ வலஞ்சுழி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்ற நடந்தது. பிப்., 7ல் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. மூன்று கால யாகசாலை பூஜைக்கு பின்னர் இன்று கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன் பின்னர் விநாயகருக்கு பிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் மீனாட்சி, துணைத்தலைவர் கலையரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகு பாண்டி, தர்மராஜ், சௌந்தரராஜன், அலுவலர்கள் நடராஜன், அழகர்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.