நிரதலமுடைய அய்யனார் சோனையா சாமி கோவிலில் பொங்கல் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2024 11:02
மானாமதுரை; மானாமதுரை நிரதலமுடைய அய்யனார் சோனையா சாமி கோவில் பொங்கல் பூஜை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள நிரதலமுடைய அய்யனார் சோனையா சுவாமி கோயிலில் வருடம் தோறும் மானாமதுரை விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் சங்கத்தினர் சார்பில் தை மாதம் கடைசி வெள்ளியன்று பொங்கல் பூஜை விழா கொண்டாடுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டிற்கான விழா நேற்று நடைபெற்றதை முன்னிட்டு சுவாமிகளுக்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக ஐந்தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் சங்கத்தினர் ஊர்வலமாக சுவாமிக்கு பூஜை பொருட்களை கொண்டு வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை மானாமதுரை விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.