அயோத்தி பால ராமரை 15 நாளில் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம்; காணிக்கை இத்தனை கோடியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2024 12:02
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டா விழா ஜனவரி 22 அன்று நடைபெற்றது. விழாவானது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ராமரை தரிசிக்க நாடு முழுதும் இருந்து பக்தர்கள் வருகை தினமும் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அயோத்தி நகருக்கு வருகை தருகின்றனர். 15 நாளில் 30 லட்சம் பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்துள்ளனர். ஜனவரி 22ம் தேதி ஒரேநாளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 3.17 கோடி ரூபாய். ஒரு நாளைக்கு 85 லட்ச ரூபாய் என காணிக்கை தொகையாக 12.8 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மிகப் பெரிய ஆன்மிக தலமாக அயோத்தி உருவெடுத்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் முழு வீச்சில் செய்து வருகின்றன.