திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2024 06:02
திண்டுக்கல்; திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்.8ல் பூத்தமலர் பூ அலங்காரத்துடன் துவங்கியது. விழாவில் இன்று பிப்.13ல் கொடியேற்றம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிப்.24ல் தசாவதாரம், பிப்.25ல் மஞ்சள் நீராட்டு, பிப்.27ல் தெப்ப உற்ஸவம் நடக்கிறது.