Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ... திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது திருச்செந்தூர் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று பிரதமர் திறக்கும் அபுதாபி இந்து கோவில்; பிரமாண்ட கோபுரம்.. ராமாயண சிற்பம்.. இத்தனை சிறப்புகளா!
எழுத்தின் அளவு:
இன்று பிரதமர் திறக்கும் அபுதாபி இந்து கோவில்; பிரமாண்ட கோபுரம்.. ராமாயண சிற்பம்.. இத்தனை சிறப்புகளா!

பதிவு செய்த நாள்

14 பிப்
2024
08:02

அபுதாபி ; ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கும் சுவாமி நாராயன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இக்கோவில் வடஇந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரக்கதின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோவில் கட்ட, 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இத்துடன் கூடுதலாக, 13.5 நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த, 2019ம் ஆண்டு கொடுத்தது. இதனையடுத்து 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நராயண் கோயில் கட்ட நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இக்கோயில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் ஆகியவற்றால் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ராஜஸ்தானிலிருந்து சுமார், 7 லட்சம் செங்கற்கள் அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டன. மொத்தம், 7 கோபுரங்கள் இருக்கின்றன; இந்த கோபுரங்கள் அனைத்தும் அபுதாபியின் சிறந்த கட்டடங்களின் அடையாளமாக திகழ்கிறது. நிலநடுக்கம், மற்றும் அதீத வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க, 300 சென்சார்கள் கோவிலுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், கோவிலை குளுமையாக வைத்துக்கொள்ள நானோ டைல்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் பெரும்பாலான பகுதிகளை கட்ட இரும்பு அல்லாத பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோவிலின் உட்புறத்தை பொறுத்த அளவில், ராமாயணம் மற்றும் மகாபாரதம் உட்பட இந்தியாவில் இருந்து 15 கதைகள் தவிர, மாயன், ஆஸ்டெக், எகிப்திய, அரபு, ஐரோப்பிய, சீன மற்றும் ஆப்பிரிக்க நாகரிகங்களின் கதைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலை கட்டி முடிக்க சுமார், 700 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா(BAPS) சார்பில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இன்று இக்கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலை மீது 11 நாட்கள் தொடர்ந்து ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து 70 கி.மீ., துாரத்திலும், கோலாரில் இருந்து 4 கி.மீ., துாரத்திலும் அமைந்துள்ளது ... மேலும்
 
temple news
சூலூர்; "மனித சமுதாயத்துக்கு ஆக்கபூர்வமான சக்திகளை கொடுத்து வருவது பழநி மலையும், அங்கு ஆட்சி புரியும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை ... மேலும்
 
temple news
போடி; மார்கழி தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு போடி அருகே வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar