காணக்கிடைக்காத கருட சேவை; திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2024 12:02
திருப்பதி; திருப்பதி ரத சப்தமி விழாவில் கருட சேவை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலையில் ஆண்டுதோறும் சூரியனின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் ரத சப்தமியை தேவஸ்தானம் வெகு விமரிசையாக நடத்தி வருகிறது. அன்றைய நாளில், ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி, ஏழு வாகனங்களில் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம். இன்று காலை 5.30மணிக்கு ரதசப்தமியை முன்னிட்டு சூர்யபிரபை வாகனசேவையுடன் துவங்கியது. சூரியபிரப வாகனத்தில் ஸ்ரீநிவாசனை தரிசனம் செய்வதால், ஆரோக்கியம், கல்வி, செல்வம், சந்ததி போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொடர்ந்து, காலை 9 முதல் 10 வரை சின்னசேஷ வாகனம், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகன சேவை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிற்பகல் 1 முதல் 2 வரை ஹனுமந்த வாகனம், மதியம் 2 முதல் 3 வரை புஷ்கரிணியில் சக்ரஸ்நானம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம், இரவு 8 முதல் 9 வரை சந்திர பிரபை வாகனம் என ஏழு வாகனத்தில் வலம் வருகிறார் மலையப்பசுவாமி. TTD விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.