ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2024 04:02
அவிநாசி; அவிநாசி ராயம்பாளையத்தில் காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா முன்னிட்டு தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.
அவிநாசி ராயம்பாளையத்தில் உள்ள காட்டு மாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக பொங்கல் பூச்சாட்டு விழாவிற்கான பொட்டுச்சாமி பொங்கல், காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் ஆகியவை 13ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. வரும் 22ம் தேதி அம்மன் அழைத்தல், பூவோடு, விளக்கு மாவு எடுத்து வருதல், கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகளும், 23ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது.