கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மனதில் மறைந்துள்ள தீயகுணங்கள் ஏழு. இவற்றை போக்கினால் தட்சிணாமூர்த்தி போல நாமும் அமைதியுடன் வாழலாம். * தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிரில் சப்தகன்னியர் சன்னதி இருக்கும். சப்தமாதர்கள் என்றும் சொல்வதுண்டு. * நம் உடம்பிலுள்ள சப்த தாதுக்களுக்கு இவர்களே அதிதேவதைகள். பிராமி – தோல், மகேஸ்வரி – நிணம்,(கொழுப்பு), கவுமாரி – ரத்தம், வைஷ்ணவி – சீழ், வாராகி – எலும்பு, இந்திராணி – தசை, சாமுண்டி – நரம்புக்கும் உரியவர்களாவர். * இவர்களை வழிபட்டால் தீயகுணங்கள் அனைத்தும் நீங்கும். பிராமி – காமம், மகேஸ்வரி – கோபம், வைஷ்ணவி – பேராசை, கவுமாரி – மாயை(நிலையாமை), இந்திராணி – குற்றம் காணல், சாமுண்டி – புறம் பேசுதல் வாராகி – பொறாமையை போக்கி நம்மை காக்கின்றனர்.