ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் விழாவில் குத்தியோட்டம் நிகழ்ச்சி; வரும் 25ல் பொங்காலை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2024 10:02
திருவனந்தபுரம்; கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் விழாவை யொட்டி, நடந்த குத்தியோட்டம் என்ற வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர்கள் பங்கேற்றனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி, கொடுங்கல்லுார் சென்றதாகவும், வழியில் திருவனந்தபுரம் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும் நம்பப்படுகிறது.அவர் தங்கிய இடத்தில் கட்டப்பட்ட கோவிலே, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழா, மிகவும் சிறப்பு பெற்றதாகும். இவ்விழா பிப்., 17ம் தேதி சனிக்கிழமை அம்மனுக்குக் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. பிப்., 25ம் தேதி காலை 10.30 மணிக்கு பண்டார அடுப்பில் தீ மூட்டுதலுடன் பொங்காலை வழிபாடு நடைபெறும். மதியம் 2.30 மணிக்கு உச்ச பூஜையும், பொங்காலை நிவேத்யம் மற்றும் தீபாராதனையும் நடைபெறும். 26ம் தேதி நள்ளிரவு குருதி தர்ப்பணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.