பதிவு செய்த நாள்
21
பிப்
2024
10:02
திருப்புவனம் : ஆதிசங்கரர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் ஜோடிமோரீ, 31, தன்னந்தனியாக இந்தியாவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். ஆஸ்திரேலியா நாட்டில் சகோதரி, தாயுடன் வசித்து வரும் ஜோடிமோரீ, கல்லுாரி படிப்பை முடித்து விட்டு இசை மற்றும் யோகா ஆசிரியையாக பணிபுரிகிறார். ஆதிசங்கரர் நுால்களை படித்தவர் அவரது அறிவுரைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறார். ஆதிசங்கரர் வாழ்ந்த இடங்களை காண சகோதரி, தாய் ஆதரவுடன் கடந்தாண்டு நவ., 15ல் இந்தியா வந்த அவர், ஒடிசா மாநிலம் பூரியிலிருந்து பாத யாத்திரையை துவக்கனார். ஆந்திரா மாநிலம் வழியாக ராமேஸ்வரம் வந்தவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் திருப்புவனம் வந்தார். கேரள மாநிலத்தில் ஆதிசங்கரர் பிறந்த காலடி வழியாக பத்ரிநாத்தில் பாதயாத்திரையை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார். தினமும் 20 - 40 கி.மீ., வரை பாதயாத்திரை செல்கிறார். 6,500 கி.மீ., பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார்.