பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2024 10:02
பழநி; பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்குவீதி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா மூகூர்த்தகால் நடுதலுடன் பிப்.9ல் விழா துவங்கியது. முன்னதாக சண்முக நதியில் காலையில் தீர்த்தவாரி நடைபெற்றது. பிப்.13 இரவு மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்பட்டது. நேற்று (பிப்., 20) இரவு 7:20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சிலை கொடி மரத்தின் அருகே வைக்கப்பட்டது. சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாரியம்மன் கோயில் முன் வைக்கப்பட்ட கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று பிப்.21ல் அடிவாரம் அழகு நாச்சிஅம்மன் திருக்கல்யாணம், குமாரசத்திரம் அழகு நாச்சிஅம்மன் திருக்கல்யாணம் காலை 9:00 மணிக்கு மேல் நடைபெறும். புதுச்சேரி சப்பரம், சிம்ம வாகனம், வெள்ளி யானை, தங்க குதிரை, தங்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பிப்.27 அன்று இரவு திருக்கல்யாணமும், பிப்.28ம் தேதி தேரோட்டமும் நடைபெறும். பிப்.29ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது. கொடியேற்றத்தில் கோயில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.