பதிவு செய்த நாள்
21
பிப்
2024
10:02
பந்தலூர்; பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில், ஸ்ரீபகவதி கோவில் மறு பிரதிஷ்டை மகா திருவிழா நடந்தது. கடந்த பத்தாம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கி, 17 மற்றும் 18 ஆம் தேதி பள்ளி அறையில் தீபம் ஏற்றி நாமஜெபம் கூறுதல், 19ஆம் தேதி காலை விளக்கு வைத்து நாமஜெபம் கூறுதல் மாலை 4மணிக்கு ஆச்சாரியா வரணம் தொடர்ந்து ஹோம பூஜைகள் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது 20ம் தேதி அதிகாலை 4மணி முதல் சிறப்பு ஹோமம் பூஜைகள், தொடர்ந்து தேவியை ஆதரிக்கும் கூட்டு சபை, தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை முதல் சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டதுடன், பீடம் பிரதிஷ்டை, கலச பூஜைகள், கலச தரிசனம் தொடர்ந்து அம்மனை கோவில் பீடத்தில் வைத்தல், கோவிலை சுற்றி திருவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சிகள் நடந்தது. பூஜைகளை தந்திரி ராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். திருவிழா நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் இசை வாத்தியம் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் பக்தர்களையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் ராகவன், செயலாளர் குஞ்சுராமன் மற்றும் கமிட்டியினர், விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.