திருப்புவனம் புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா மார்ச் 4ல் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2024 01:02
திருப்புவனம்; திருப்புவனம் புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் மார்ச் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்புவனம் நகரின் காவல் தெய்வமான ரேணுகாதேவி மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பத்து நாட்கள் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும், இந்தாண்டு திருவிழா வரும் மார்ச் 4ம் தேதி திங்கள்கிழமை இரவு 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மார்ச் 12ம் தேதி பொங்கல் உற்சவமும், 13ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. மாசி திருவிழாவை ஒட்டி நேற்று காலை கோயில் முன் முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. முகூர்த்த கால் நடும் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. முகூர்த்த கால் காலை 10:00 மணிக்கு நடப்பட்டு பூஜைகள் நடந்தன.