Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி மகம்: விருத்தகிரீஸ்வரர் ... கடற்கரையில் தீர்த்தவாரிக்கு அணிவகுத்த சுவாமிகள்; புனித நீராடி வழிபட்ட பக்தர்கள் கடற்கரையில் தீர்த்தவாரிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் திருவிழாவிற்கு தயாராகும் அக்னிசட்டிகள், பொம்மைகள்
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் திருவிழாவிற்கு தயாராகும் அக்னிசட்டிகள், பொம்மைகள்

பதிவு செய்த நாள்

24 பிப்
2024
12:02

திருப்புவனம்; தென்மாவட்டங்களில் மாசி, பங்குனி மாதங்களில் மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்கள் தொடங்கியுள்ளதால் திருப்புவனத்தில் தொழிலாளர்கள் அக்னிசட்டிகள் தயாரிப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர். மாசி, பங்குனி மாதங்களில் தென்மாவட்டங்களில் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும், திருப்புவனம், தாயமங்கலம், இருக்கன்குடி உள்ளிட்ட ஊர்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் விரதமிருந்து அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பொம்மை, பாதம், நாகம் உள்ளிட்டவைகளை சுமந்து வந்து கோயில்களில் நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். இதற்காக திருப்புவனம் வேளார் தெருவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அக்னிசட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் கூறுகையில் : சுற்றுப்புற சூழலை பாதிக்காத பச்சை மண் சட்டிகள் இவைகள், தண்ணீரில் போட்டாலும் கரைந்து விடும், மண்ணை எந்த விதத்திலும் பாதிக்காது நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 சட்டிகள் வரை தயாரிக்கிறோம், பின் அதற்கு வர்ணம் பூசி அம்மன் படங்களை வரைந்து வெயிலில் காயவைத்து விற்பனை செய்கிறோம், அக்னி சட்டிகள் 500 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் கண்பானை, பொம்மை உள்ளிட்டவைகளும் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கண்மாய்களில் தண்ணீர் இருப்பதால் சவடு மணலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது, என்றார். திருப்புவனம் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயிலில் வரும் மார்ச் 4ம் தேதி இரவு எட்டு மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளதால் பொம்மைகள் , அக்னிசட்டிகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar