பதிவு செய்த நாள்
27
பிப்
2024
12:02
குன்னூர்; அருவங்காடு ஐயப்பன் கோவில் 51 வது ஆண்டு பிரதிஷ்டா விழாவில், ஐயப்பன் திருத்தேர் ஊர்வலம் விமரிசையாக நடந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அருவங்காடு ஐயப்பன் கோவில் 51ம் ஆண்டு பிரதிஷ்டா விழா, பனவூர் பரமேஸ்வரர் நம்பூதிரி தலைமையில் கணபதி ஹோமம் கொடியேற்றத்துடன் துவங்கியது திருவிழா நாளான நேற்று கணபதி ஹோமம், கலச பூஜை, தீபாராதனை, பிரசாதம் விநியோகம் நடந்தது. தொடர்ந்து ஐயப்பன் திருவீதி உலா துவங்கி தொழிற்சாலை குடியிருப்பு, பாலாஜி நகர், அருவங்காடு, வெடிமருந்து தொழிற்சாலை வழியாக சென்றது. அங்கிருந்து செண்டை மேளம் முழங்க தாளப் பொலி ஊர்வலத்தில் பாரம்பரிய உடை அணிந்த மகளிர் விளக்குகள் ஏந்தி ஊர்வலமாக கோவில் வந்தடைந்தனர். மகா தீபாராதனை, கொடி இறக்கம், பிரசாத விநியோகம், வாண வேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை ஐயப்ப பஜன் சங்கம் நிர்வாகிகள் செய்தனர்.