கும்பகோணம்: துகிலியில் விஜயதசமியை முன்னிட்டு காவடி மகோத்ஸவம் நடந்தது. ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியன்று காவடி உற்சவம் நடந்து வருகிறது. அந்த வகையில் காவிரி ஆற்றின் ஆடிப்பூர படித்துறையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.இதையொட்டி, ஜ்வரஹரேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக சங்கல்பம் செய்து கொண்டு, புண்யாகவாசனம், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, காவடி பூஜைகள் செய்யப்பட்டன.இதையடுத்து பக்தர்கள் பால் காவடிகளை எடுத்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக கஞ்சனூர் அக்னீஸ்வர ஸ்வாமி (சுக்கிரன் தலம்) கோவிலை சென்றடைந்தனர்.அங்கு, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய ஸ்வாமி மூலவர், உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.