திருச்செந்தூர் முருகன் கோவிலில் 6 ஆண்டுக்கு பின் தாராபிஷேகம்; உபயதாரர்களால் மீண்டும் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2024 12:02
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட தாராபிஷேகம் இன்று மீண்டும் துவங்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் மூலவருக்கு ஏற்படும் கடும் வெப்பத்தை தணிக்கும் பொருட்டு தாராபிஷேக பூஜை செய்யப்படும். இந்த தாராபிஷேகம் 2018ம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இன்று முதல் உபயதாரர்களால் சுமார் 100 லிட்டர் பால் கொண்டு தினசரி காலை தாராபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று 6 ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட தாராபிஷேகம் இன்று மீண்டும் துவங்கப்பட்டது. கோயில் யாகசாலையில் 122 முறை ருத்ர ஜெபம் பாராயணம் செய்து 122 லிட்டர் பால் கொண்டு தாராபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.