கோவை கோனியம்மன் தேருக்கு கல் உப்பு, மிளகு கொட்டி பக்தர்கள் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2024 01:02
கோவை; கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. அதையொட்டி காலை முதலே ராஜவீதி தேர் திடலில் இருக்கும் தேருக்கு பொதுமக்கள் கல் உப்பு மற்றும் மிளகு கலந்து வீசி தங்களின் பிரார்த்தனையை நிறைவேற்றினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று பகல், 2:05 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.