பதிவு செய்த நாள்
28
பிப்
2024
03:02
கோவை; கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.
கோவை கோனியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவையொட்டி, கடந்த, 12ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், 13ம் தேதி, பூச்சாட்டு விழாவும், 20ம் தேதி, கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் யாகசாலை பூஜைகளும், புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு, வெள்ளை யானை வாகனங்களில் கோனியம்மன் திருவீதியுலா வந்து, பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி பகல், 2:05 மணிக்கு துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மத்தியில் கோவை நகர வீதிகளில் வலம் வந்தது. தேரில் உற்சவர் கோனியம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். வருடத்திற்கு ஒருமுறை நிகழும் இந்த தேரோட்டத்தை காண காலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.